இன்றைய நவீன யுகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றது. ஆனால் ஒழுக்கவியல் சார்ந்த விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது. மானுடவியல், சூழலியல், சமூகவியல் சார்ந்த எந்த தெளிவான பார்வையும் இக்கால மாணவர்களுக்கு இல்லை. இச்சூழலை மாற்றுவதற்கும், இளமைப் பருவத்தில் தமது ஆன்மிக பண்பாட்டு வளர்ச்சியில் உயரிய இஸ்லாமிய மானுட விழுமங்களை கடைப்பிடிப்பதற் கும் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
சமுதாயத்திற்கு பங்களிப்பு செலுத்தக்கூடிய நல்ல முன்மாதிரி மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனடிப்படையில், நல்ல ஒழுக்கத்துடன் பண்பாடு மிகுந்த சமுதாயத்தை உருவாக்கக் கூடிய ஓர் கல்வித் தளமாக இஸ்லாமிய கல்வி வாரியம் தமிழ்நாடு செயல்படுகிறது. இஸ்லாமிய கல்வியை பரவலாக்குவதற்காக தொலைதூர இஸ்லாமிய பட்டயப் படிப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது.